• Jun 17 2026

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரம்: நீர்கொழும்பில் மூன்று பெண்கள் கைது

Chithra / Jun 16th 2026, 10:49 am
image


நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.


நேற்று (15) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, குறித்த இடத்தை முகாமைத்துவம் செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரும், அங்கு தங்கியிருந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வாரியப்பொல, பூஸ்ஸ மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரம்: நீர்கொழும்பில் மூன்று பெண்கள் கைது நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.நேற்று (15) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, குறித்த இடத்தை முகாமைத்துவம் செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரும், அங்கு தங்கியிருந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வாரியப்பொல, பூஸ்ஸ மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement