• May 18 2026

வவுனியாவில் சேதமடைந்த கோதண்டர்நொச்சிக்குளம் குளத்தை பார்வையிட்ட சத்தியலிங்கம் எம்.பி - திருத்தம் செய்ய நடவடிக்க

Chithra / Dec 24th 2025, 8:20 pm
image


இயற்கை பேரிடர் காரணமாக வவுனியா மாவட்டத்தில் கோதண்டர்நொச்சிக்குளம் குளம் உடைப்பெடுத்திருந்தது. நேற்றைய தினம் பெய்த மழையினால் மீண்டும் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் குளக்கட்டு உடைந்துள்ளமையால் நீரை சேமிக்க முடியாத நிலை காணப்பட்டது.

குறித்த குளத்திற்கு கீழ் 160 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடியதாக வயல் உள்ளது. இன்றைய தினம்  கோதண்டர் நொச்சிக்குளம் குளத்தினை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்  நேரில் சென்று ஆய்வு செய்திருந்ததுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவி கமநல ஆணையாளர் ஆகியோருடன் விடயம் தொடர்பில் தொலைபேசியூடாக கலந்துரையாடப்பட்டது. கமக்காரர் அமைப்பு மற்றும் இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரச்சினைக்கு தீர்வுகான உத்தேசிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் வருகைதந்ததுடன் இடத்தினையும் பார்வையிட்டனர். ஓரிரு நாட்களில் உடைந்த குளக்கட்டை மீண்டும் புனரமைத்து நீரை சேமித்து நெற்செய்கையினை மேற்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்டது.

அத்துடன் கோதண்டர்நொச்சிக்குளம் கிராமத்தில் சேதமடைந்த முக்கிய வீதிகளை பார்வையிட்டதுடன் அவற்றை உடனடியாக திருத்தம் செய்ய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


வவுனியாவில் சேதமடைந்த கோதண்டர்நொச்சிக்குளம் குளத்தை பார்வையிட்ட சத்தியலிங்கம் எம்.பி - திருத்தம் செய்ய நடவடிக்க இயற்கை பேரிடர் காரணமாக வவுனியா மாவட்டத்தில் கோதண்டர்நொச்சிக்குளம் குளம் உடைப்பெடுத்திருந்தது. நேற்றைய தினம் பெய்த மழையினால் மீண்டும் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் குளக்கட்டு உடைந்துள்ளமையால் நீரை சேமிக்க முடியாத நிலை காணப்பட்டது.குறித்த குளத்திற்கு கீழ் 160 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடியதாக வயல் உள்ளது. இன்றைய தினம்  கோதண்டர் நொச்சிக்குளம் குளத்தினை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்  நேரில் சென்று ஆய்வு செய்திருந்ததுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவி கமநல ஆணையாளர் ஆகியோருடன் விடயம் தொடர்பில் தொலைபேசியூடாக கலந்துரையாடப்பட்டது. கமக்காரர் அமைப்பு மற்றும் இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் பிரச்சினைக்கு தீர்வுகான உத்தேசிக்கப்பட்டது.இதனையடுத்து குறித்த இடத்திற்கு இராணுவத்தினர் வருகைதந்ததுடன் இடத்தினையும் பார்வையிட்டனர். ஓரிரு நாட்களில் உடைந்த குளக்கட்டை மீண்டும் புனரமைத்து நீரை சேமித்து நெற்செய்கையினை மேற்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்டது.அத்துடன் கோதண்டர்நொச்சிக்குளம் கிராமத்தில் சேதமடைந்த முக்கிய வீதிகளை பார்வையிட்டதுடன் அவற்றை உடனடியாக திருத்தம் செய்ய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement