• May 21 2026

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி

Chithra / Nov 16th 2025, 1:40 pm
image


திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றும் இன்றும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.    

அத்தோடு திருகோணமலை மாவட்ட மாவீரர் குடும்ப கௌரவிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றும் இன்றும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.    அத்தோடு திருகோணமலை மாவட்ட மாவீரர் குடும்ப கௌரவிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement