• Apr 22 2026

இலங்கையை வந்தடைந்தது ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல்...!

Chithra / Jan 15th 2024, 10:59 am
image

 

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை தந்துள்ளது.

இந்த குழுவினர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் நாளைய தினம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் அதன்பின்னர் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.


இலங்கையை வந்தடைந்தது ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல்.  ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை தந்துள்ளது.இந்த குழுவினர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் நாளைய தினம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் அதன்பின்னர் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement