• Jul 01 2026

நாடளாவிய ரீதியில் 7,188 இடங்களில் நுளம்பு பெருகும் அபாயம்! 6000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு

Chithra / Jun 30th 2026, 9:49 am
image


நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அவற்றில் 7,188 இடங்கள் நுளம்பு பெருக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம் அவர் கூறியுள்ளார்.


இதேவேளை, நேற்று முன்தினம் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன், டெங்கு நோயினால் இதுவரையில் 31 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் 7,188 இடங்களில் நுளம்பு பெருகும் அபாயம் 6000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அவற்றில் 7,188 இடங்கள் நுளம்பு பெருக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, நேற்று முன்தினம் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், டெங்கு நோயினால் இதுவரையில் 31 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement