• Jul 06 2026

சிறையில் மீண்டும் கலவரம்; மேலும் 20 கைதிகள் காயம் - மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு

Chithra / Jul 6th 2026, 10:45 am
image


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று ஏற்பட்டுள்ள  மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதிகள் குழுவுக்கும் இடையிலான மோதலாக இது பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இன்று (06) காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், பின்னர் மீண்டும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறையில் மீண்டும் கலவரம்; மேலும் 20 கைதிகள் காயம் - மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று ஏற்பட்டுள்ள  மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதிகள் குழுவுக்கும் இடையிலான மோதலாக இது பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று (06) காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், பின்னர் மீண்டும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement