மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மற்றும் அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைக் காப்பாற்றுவதற்கும் படையினரின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் தனது மகன் யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தரப்பினர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் தொடரப்படும் நிலையில், தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள பாரிய முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஜகத் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான உத்தரவாத விலை வழங்கப்படும் என்றும், அரச ஊழியர்களின் சம்பளம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும் என்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பாராளுமன்றச் சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பாராளுமன்ற உணவுக்காக 80 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் செலவை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் – ஜகத் குமார குற்றச்சாட்டு மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மற்றும் அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைக் காப்பாற்றுவதற்கும் படையினரின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் தனது மகன் யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தரப்பினர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் தொடரப்படும் நிலையில், தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள பாரிய முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஜகத் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான உத்தரவாத விலை வழங்கப்படும் என்றும், அரச ஊழியர்களின் சம்பளம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும் என்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், பாராளுமன்றச் சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பாராளுமன்ற உணவுக்காக 80 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் செலவை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதனிடையே, முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.