நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதால், நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாகும் அளவும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தற்போது சிறுபோக விவசாயப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கையிருப்பில் உள்ள நீர் விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கும் எதிர்வரும் மாதங்களில் தேவையான அளவு நீர் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கக்கூடும். எனவே, விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக நீரை பயன்படுத்தும்போது மிகவும் சிக்கனமாக செயற்படுமாறு பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைவு; நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதால், நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாகும் அளவும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், தற்போது சிறுபோக விவசாயப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கையிருப்பில் உள்ள நீர் விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கும் எதிர்வரும் மாதங்களில் தேவையான அளவு நீர் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், தொடர்ந்தும் அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கக்கூடும். எனவே, விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்காக நீரை பயன்படுத்தும்போது மிகவும் சிக்கனமாக செயற்படுமாறு பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.