• Jun 30 2026

106 மணிநேரம்யி இடிபாடுகளுக்குள் சிக்கிருந்த இளைஞன் மீட்பு! - உயிரிழப்பு 1,700 ஆக உயர்வு

Chithra / Jun 30th 2026, 11:34 am
image


வெனிசுவேலாவின் லாகாயிரா (La Guaira) மாநிலத்தில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 106 மணிநேரம் சிக்கியிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.


ஆரோன் லெவி கேன்டிலோ வர்காஸ் (Aaron Levi Cantillo Vargas) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இளைஞர், காரபல்லேடா (Caraballeda) நகரில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கலே தெரிவித்துள்ளார்.

 

வெனிசுவேலா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இணைந்து இந்தச் சவாலான மீட்புப் பணியை முன்னெடுத்தனர். 


இந்த இளைஞரை மீட்பதற்கான முயற்சியில் மிகப்பெரிய சிக்கல் இருந்ததாக ஜனாதிபதி நயீப் புக்கலே குறிப்பிட்டுள்ளார்.


அதாவது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞருக்கும், அவரை மீட்கச் சென்ற குழுவினருக்கும் இடையில் உயிரிழந்த ஒருவரது உடல் இருந்ததால், மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.

 

இளைஞரை மீற்பதற்காக மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக 43 மணிநேரம் கடுமையாகப் போராடியதாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.


 

இந்நிலையில் வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். 


இந்த இயற்கை பேரிடரில் 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகின்றது.

106 மணிநேரம்யி இடிபாடுகளுக்குள் சிக்கிருந்த இளைஞன் மீட்பு - உயிரிழப்பு 1,700 ஆக உயர்வு வெனிசுவேலாவின் லாகாயிரா (La Guaira) மாநிலத்தில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 106 மணிநேரம் சிக்கியிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.ஆரோன் லெவி கேன்டிலோ வர்காஸ் (Aaron Levi Cantillo Vargas) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இளைஞர், காரபல்லேடா (Caraballeda) நகரில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கலே தெரிவித்துள்ளார். வெனிசுவேலா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இணைந்து இந்தச் சவாலான மீட்புப் பணியை முன்னெடுத்தனர். இந்த இளைஞரை மீட்பதற்கான முயற்சியில் மிகப்பெரிய சிக்கல் இருந்ததாக ஜனாதிபதி நயீப் புக்கலே குறிப்பிட்டுள்ளார்.அதாவது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞருக்கும், அவரை மீட்கச் சென்ற குழுவினருக்கும் இடையில் உயிரிழந்த ஒருவரது உடல் இருந்ததால், மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன. இளைஞரை மீற்பதற்காக மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக 43 மணிநேரம் கடுமையாகப் போராடியதாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரில் 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement