• Sep 20 2026

12 மாவட்டங்களுக்கு நாளை வரை சிவப்பு அபாய எச்சரிக்கை - நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால் அவதானம்

Chithra / Sep 20th 2026, 11:39 am
image



நாட்டின் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.


இதன்படி, கட்டம் 1 – எச்சரிக்கை மற்றும் கட்டம் 2 – அவதானம் ஆகிய இரு நிலைகளின் கீழ் எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:


காலி: நாகொட, நெளுவ

கண்டி: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை

கேகாலை: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல

மாத்தறை: பிடபெத்தற

நுவரெலியா: கொத்மலை, கொத்மலை கிழக்கு

இரத்தினபுரி: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட

களுத்துறை: பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள


கட்டம் 1 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:


கொழும்பு: சீதாவக்க

களுத்துறை: இங்கிரிய

கேகாலை: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய

மாத்தறை: கொடபொல, அக்குரஸ்ஸ

இரத்தினபுரி: கிரியெல்ல, கலவானை

காலி: தவலம


இந்நிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண் சரிவு, மண்மேடு சரிவு மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை (21) முற்பகல் 10.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களுக்கு நாளை வரை சிவப்பு அபாய எச்சரிக்கை - நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டால் அவதானம் நாட்டின் 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.இதன்படி, கட்டம் 1 – எச்சரிக்கை மற்றும் கட்டம் 2 – அவதானம் ஆகிய இரு நிலைகளின் கீழ் எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:காலி: நாகொட, நெளுவகண்டி: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளைகேகாலை: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகலமாத்தறை: பிடபெத்தறநுவரெலியா: கொத்மலை, கொத்மலை கிழக்குஇரத்தினபுரி: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொடகளுத்துறை: பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்களகட்டம் 1 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்:கொழும்பு: சீதாவக்ககளுத்துறை: இங்கிரியகேகாலை: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டியமாத்தறை: கொடபொல, அக்குரஸ்ஸஇரத்தினபுரி: கிரியெல்ல, கலவானைகாலி: தவலமஇந்நிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண் சரிவு, மண்மேடு சரிவு மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை (21) முற்பகல் 10.00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement