• Sep 03 2026

மண்கும்பானில் கிணற்றிலிருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்பு

Chithra / Sep 3rd 2026, 10:49 am
image


யாழ்ப்பாணம் – மண்கும்பான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 60 மில்லிமீட்டர் அளவுடைய இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று (02) மீட்கப்பட்டுள்ளன.


மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளனர்.


தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், கிணற்றிலிருந்து இரண்டு மோட்டார் குண்டுகளையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மண்கும்பானில் கிணற்றிலிருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்பு யாழ்ப்பாணம் – மண்கும்பான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 60 மில்லிமீட்டர் அளவுடைய இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று (02) மீட்கப்பட்டுள்ளன.மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், கிணற்றிலிருந்து இரண்டு மோட்டார் குண்டுகளையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement