அக்கரையங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் பொலிஸ் நிலையத்தில் ஹலோ டிரஸ்ட் (HALO Trust) கண்ணிவெடி அகற்றும் நிறுவன அதிகாரிகளால் இது குறித்த முதற்கட்டத் தகவல் வழங்கப்பட்டது.
இருப்பினும், குறிப்பிட்ட பகுதி அக்கரையங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்டது என்பதால், அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் 2:30 மணியளவில் ஹலோ டிரஸ்ட் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, அக்கரையங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று குறித்த நான்கு குண்டுகளையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட குண்டுகள் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்களின் பின்னர், குறித்த நான்கு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரையங்குளம் பகுதியில் 4 வெடிகுண்டுகள் மீட்பு: செயலிழக்கச் செய்ய நடவடிக்கை அக்கரையங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனேரிகுளம் பகுதியில், போரின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கடந்த 2026.05.07 அன்று ஜெயப்புரம் பொலிஸ் நிலையத்தில் ஹலோ டிரஸ்ட் (HALO Trust) கண்ணிவெடி அகற்றும் நிறுவன அதிகாரிகளால் இது குறித்த முதற்கட்டத் தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட பகுதி அக்கரையங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்டது என்பதால், அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் 2:30 மணியளவில் ஹலோ டிரஸ்ட் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, அக்கரையங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று குறித்த நான்கு குண்டுகளையும் மீட்டனர்.மீட்கப்பட்ட குண்டுகள் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்களின் பின்னர், குறித்த நான்கு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.