வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
போதிய வசதிகள் கொண்ட நகரப் பாடசாலைகளுக்கு சவால் விடுத்த இந்த கிராமப்புற பாடசாலை மாணவிகள், முதல் போட்டியிலேயே 5 ஓவர்களில் 148 ஓட்டங்களை குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
இறுதிப் போட்டியில் எதிரணியினரை வெறும் 20 ஓட்டங்களுக்குள் சுருட்டி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
உயர்தர வகுப்புகள் இன்றி சாதாரண தரம் வரை மட்டுமே கொண்ட இந்த சிறிய பாடசாலை வலய மட்டத்தில் சாம்பியனாக உருவெடுத்தது பாடசாலை வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்றுவிப்பாளர் ஜெ. மோகன் வழிகாட்டலில் கிரேஸ், திசாலினி, சர்மிளா பாவனா, லினுசிகா உள்ளிட்ட மாணவிகள் இந்த சாதனையை படைத்தனர்.
இவர்கள் இப்போது மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர். இந்த வெற்றி சமூக ஆர்வலர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
நகரப் பாடசாலைகளை வீழ்த்தி சாதனை. கிராமப்புற மாணவிகள் சாம்பியன் வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.போதிய வசதிகள் கொண்ட நகரப் பாடசாலைகளுக்கு சவால் விடுத்த இந்த கிராமப்புற பாடசாலை மாணவிகள், முதல் போட்டியிலேயே 5 ஓவர்களில் 148 ஓட்டங்களை குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இறுதிப் போட்டியில் எதிரணியினரை வெறும் 20 ஓட்டங்களுக்குள் சுருட்டி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.உயர்தர வகுப்புகள் இன்றி சாதாரண தரம் வரை மட்டுமே கொண்ட இந்த சிறிய பாடசாலை வலய மட்டத்தில் சாம்பியனாக உருவெடுத்தது பாடசாலை வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்றுவிப்பாளர் ஜெ. மோகன் வழிகாட்டலில் கிரேஸ், திசாலினி, சர்மிளா பாவனா, லினுசிகா உள்ளிட்ட மாணவிகள் இந்த சாதனையை படைத்தனர். இவர்கள் இப்போது மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர். இந்த வெற்றி சமூக ஆர்வலர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.