• May 10 2026

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கத்தை விரைவாக மாங்குளத்தில் அமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

shanu / May 9th 2026, 10:41 pm
image


வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை, வடக்குமாகாணத்தின் மையப்புள்ளியான மாங்குளத்தில் அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலக கட்டடம் மாங்குளத்தில் அமைக்கப்படுமென வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் பதிலளித்துள்ளார்.


அத்தோடு மாங்குளத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமையப்பெறவுள்ள அந்த 02ஏக்கர் காணிக்கு சுற்றுவேலி அமைப்பதற்கும், நுழைவாயில் அமைப்பதற்கும், பெயர்ப்பலகை அமைப்பதற்கும் இவ்வாண்டில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.


அண்மையில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அநிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,


ஏற்கனவே கடந்த 04.11.2025 அன்று இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிரிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டதுடன், மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.


அத்தோடு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைப்பதற்குரிய திட்ட முன்மொழிவுகளை உரியவகையில் சமர்ப்பித்து, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்டு கூடிய விரைவில் மாங்குளத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களக் கட்டடத்தை அமைக்குமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.


இந்நிலையில் 2026ஆம் ஆண்டு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனச் சொல்லப்படுவதாக இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார்.


அத்தோடு கட்டாயமாக 2026ஆம் ஆண்டில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைக்கப்படுமெனவும், மாகாணத்தின் மையப்பகுதியில் அந்தக் கட்டடம் அமைக்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசனும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பிர் ரவிகரனிடம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள கட்டடம் மாங்குளத்தில் அமைக்கப்படுவதற்குரிய நிதி ஒதுக்கீட்டு  தொடர்பில் கடந்த 29.04.2026ஆம் திகதியன்று இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.


இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் பதிலளிக்கையில்,


கடந்த 04.11.2025அன்று மன்னார் மாவட்ட அபிவிருத்தி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக, இந்த விடயம் தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது.


குறிப்பாக ஆளுநர் தலைமையிலான  கூட்டங்களில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடினோம்.


அந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்துடன் தொடர்புகொண்டு, மாங்குளத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமையவுள்ள குறித்த காணியின் நில அளவை வரைபடம் மற்றும் காணி உறுதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளோம்.


இந்நிலையில் இந்த ஆண்டு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் அலுவலக கட்டடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு போதாமலுள்ளது.


இருப்பினும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இந்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களக் கட்டடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


எனினும் பிரதம செயலாளருடன் கலந்துரையாடி, முதற்கட்டமாக இவ்வாண்டில் மாங்குளத்திலுள்ள அந்த 02ஏக்கர் காணிக்கு சுற்றுவேலி அமைப்பதற்கும், நுழைவாயில் அமைப்பதற்கும், பெயர்ப்பலகை அமைப்பதற்குமான செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளோம் - என்றார்.


இந்நிலையில் 2027ஆம் ஆண்டிலும் இதேபோல் பதிலளிக்காமல், மாங்குளத்தில் குறித்த சுதேச மருத்துவத் திணைக்கள கட்டடத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.


கட்டாயமாக 2027ஆம் ஆண்டில் மாங்குளத்தில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்களக் கட்டடம் அமைக்கப்படுமென இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கத்தை விரைவாக மாங்குளத்தில் அமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை, வடக்குமாகாணத்தின் மையப்புள்ளியான மாங்குளத்தில் அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலக கட்டடம் மாங்குளத்தில் அமைக்கப்படுமென வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் பதிலளித்துள்ளார்.அத்தோடு மாங்குளத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமையப்பெறவுள்ள அந்த 02ஏக்கர் காணிக்கு சுற்றுவேலி அமைப்பதற்கும், நுழைவாயில் அமைப்பதற்கும், பெயர்ப்பலகை அமைப்பதற்கும் இவ்வாண்டில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அநிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,ஏற்கனவே கடந்த 04.11.2025 அன்று இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிரிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டதுடன், மீறி வேறு இடங்களில் குறித்த அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.அத்தோடு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகம் அமைப்பதற்குரிய திட்ட முன்மொழிவுகளை உரியவகையில் சமர்ப்பித்து, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்டு கூடிய விரைவில் மாங்குளத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களக் கட்டடத்தை அமைக்குமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில் 2026ஆம் ஆண்டு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்கள அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனச் சொல்லப்படுவதாக இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தார்.அத்தோடு கட்டாயமாக 2026ஆம் ஆண்டில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைக்கப்படுமெனவும், மாகாணத்தின் மையப்பகுதியில் அந்தக் கட்டடம் அமைக்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசனும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பிர் ரவிகரனிடம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள கட்டடம் மாங்குளத்தில் அமைக்கப்படுவதற்குரிய நிதி ஒதுக்கீட்டு  தொடர்பில் கடந்த 29.04.2026ஆம் திகதியன்று இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் பதிலளிக்கையில்,கடந்த 04.11.2025அன்று மன்னார் மாவட்ட அபிவிருத்தி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக, இந்த விடயம் தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது.குறிப்பாக ஆளுநர் தலைமையிலான  கூட்டங்களில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடினோம்.அந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்துடன் தொடர்புகொண்டு, மாங்குளத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமையவுள்ள குறித்த காணியின் நில அளவை வரைபடம் மற்றும் காணி உறுதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளோம்.இந்நிலையில் இந்த ஆண்டு குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் அலுவலக கட்டடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு போதாமலுள்ளது.இருப்பினும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இந்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களக் கட்டடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.எனினும் பிரதம செயலாளருடன் கலந்துரையாடி, முதற்கட்டமாக இவ்வாண்டில் மாங்குளத்திலுள்ள அந்த 02ஏக்கர் காணிக்கு சுற்றுவேலி அமைப்பதற்கும், நுழைவாயில் அமைப்பதற்கும், பெயர்ப்பலகை அமைப்பதற்குமான செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளோம் - என்றார்.இந்நிலையில் 2027ஆம் ஆண்டிலும் இதேபோல் பதிலளிக்காமல், மாங்குளத்தில் குறித்த சுதேச மருத்துவத் திணைக்கள கட்டடத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.கட்டாயமாக 2027ஆம் ஆண்டில் மாங்குளத்தில் வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்களக் கட்டடம் அமைக்கப்படுமென இதன்போது வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் சர்வானந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement