• Apr 26 2026

மதியாமடு சமூக நீர் பாவனையாளர் அமைப்பிற்கு 200,000 ரூபா நிதி ஒதுக்கிய ரவிகரன் எம்.பி!

shanu / Apr 25th 2026, 10:04 pm
image

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர்பிரிவில், பரந்தன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மதியாமடு பகுதியில் அமைந்துள்ள சமூக நீர் பாவனையாளர் அமைப்பிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் நிதியை ஒதுக்கீடுசெய்துள்ளார்.


குறித்த மதியாமடு மூக நீர் பாவனையாளர் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பிற்பாடு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதியை ஒதுக்கீடுசெய்துள்ளார்.


குறிப்பாக மதியாமடு சமூக நீர் பாவனையாளர் அமைப்பானது, அப்பகுதியிலுள்ள நூறு வரையிலான குடும்பங்களுக்கு குடிநீரை வழங்குகின்ற செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது.


இந்நிலையில் குறித்த மதியாமடு சமூக நீர் பாவனையாளர் அமைப்பின் நீர்வழங்கும் கிணறு மற்றும் நீர் வழங்கும் அறை என்பன பாதுகாப்பற்று திறந்த நிலையில் காணப்படுவதாக குறித்த அமைப்பின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர். 


எனவே பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பாதுகாப்பு வேலியினை அமைப்பதற்காக தனது2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் 200,000ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மதியாமடு சமூக நீர் பாவனையாளர் அமைப்பிற்கு 200,000 ரூபா நிதி ஒதுக்கிய ரவிகரன் எம்.பி வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர்பிரிவில், பரந்தன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மதியாமடு பகுதியில் அமைந்துள்ள சமூக நீர் பாவனையாளர் அமைப்பிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் நிதியை ஒதுக்கீடுசெய்துள்ளார்.குறித்த மதியாமடு மூக நீர் பாவனையாளர் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பிற்பாடு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதியை ஒதுக்கீடுசெய்துள்ளார்.குறிப்பாக மதியாமடு சமூக நீர் பாவனையாளர் அமைப்பானது, அப்பகுதியிலுள்ள நூறு வரையிலான குடும்பங்களுக்கு குடிநீரை வழங்குகின்ற செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது.இந்நிலையில் குறித்த மதியாமடு சமூக நீர் பாவனையாளர் அமைப்பின் நீர்வழங்கும் கிணறு மற்றும் நீர் வழங்கும் அறை என்பன பாதுகாப்பற்று திறந்த நிலையில் காணப்படுவதாக குறித்த அமைப்பின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர். எனவே பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பாதுகாப்பு வேலியினை அமைப்பதற்காக தனது2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் 200,000ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement