• Apr 19 2026

நானுஓயாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

shanu / Mar 25th 2026, 12:34 pm
image

நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 


இந்த காட்டுத்தீ தோட்டத்திற்கு மேல் பகுதியில் உள்ள நடு காட்டுப் பகுதிக்கு பரவியுள்ளது.

இதனால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகின்றது. 


காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் மலையகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகின்றன.


சிலரின் திட்டமிட்ட செயலால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

நானுஓயாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த காட்டுத்தீ தோட்டத்திற்கு மேல் பகுதியில் உள்ள நடு காட்டுப் பகுதிக்கு பரவியுள்ளது.இதனால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகின்றது. காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் மலையகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகின்றன.சிலரின் திட்டமிட்ட செயலால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement