• May 21 2026

வடக்கு, கிழக்கில் பிற்பகல் முதல் மழை; கடற்பகுதிக்கு செல்வதை தவிருங்கள்..!

Chithra / Dec 3rd 2025, 9:03 am
image

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்  பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். 


மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும்  குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்தும் ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார். 

வடக்கு, கிழக்கில் பிற்பகல் முதல் மழை; கடற்பகுதிக்கு செல்வதை தவிருங்கள். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்  பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும்  குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்தும் ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement