• May 26 2026

சட்டவிரோத தொழிற்சாலை முற்றுகை; 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் கைப்பற்றல்

Chithra / May 26th 2026, 8:48 pm
image

முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறப்படும் டின்மீன் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்று இன்று (26) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.


சந்தலங்காவ – இரபடகம பிரதேசத்தில் இயங்கி வந்த குறித்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் இருப்புகள் அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முற்றுகை மேற்கொள்ளப்பட்ட வேளையில், சந்தைக்கு விநியோகிப்பதற்காக சுமார் 3,500 டின்மீன் டின்கள் பொதியிடப்பட்டுக் கொண்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


அதிக இலாபம் ஈட்டும் நோக்கில், போட்டித்தன்மையற்ற வணிக நடவடிக்கைகளில் தொழிற்சாலை ஈடுபட்டிருந்ததுடன், காலாவதியாகும் திகதிகளுக்குப் பதிலாக போலியான திகதிகள் டின்மீன் டின்னடைகளில் அச்சிட்டு பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


மேலும், டின்மீன் பொதியிடலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த வெற்று டின்னடைகள், சுற்றட்டைகள் மற்றும் போலித் திகதிகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தையிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


முற்றுகையின்போது முத்திரையிடப்பட்ட டின்மீன்கள் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் அடுத்த சில தினங்களில் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத தொழிற்சாலை முற்றுகை; 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் கைப்பற்றல் முறையான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குவிதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறப்படும் டின்மீன் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையொன்று இன்று (26) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சந்தலங்காவ – இரபடகம பிரதேசத்தில் இயங்கி வந்த குறித்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான டின்மீன் இருப்புகள் அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முற்றுகை மேற்கொள்ளப்பட்ட வேளையில், சந்தைக்கு விநியோகிப்பதற்காக சுமார் 3,500 டின்மீன் டின்கள் பொதியிடப்பட்டுக் கொண்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.அதிக இலாபம் ஈட்டும் நோக்கில், போட்டித்தன்மையற்ற வணிக நடவடிக்கைகளில் தொழிற்சாலை ஈடுபட்டிருந்ததுடன், காலாவதியாகும் திகதிகளுக்குப் பதிலாக போலியான திகதிகள் டின்மீன் டின்னடைகளில் அச்சிட்டு பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.மேலும், டின்மீன் பொதியிடலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த வெற்று டின்னடைகள், சுற்றட்டைகள் மற்றும் போலித் திகதிகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தையிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.முற்றுகையின்போது முத்திரையிடப்பட்ட டின்மீன்கள் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் அடுத்த சில தினங்களில் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement