இலங்கையின் கொழும்பு நகருக்கான தமது விமான சேவைகளை கணிசமாக அதிகரிப்பதற்கு உலகப் புகழ்பெற்ற கட்டார் எயார்வேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2026 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த விரிவுபடுத்தப்பட்ட விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.
புதிய மாற்றத்தின்படி, நாளொன்றுக்கு 5 விமானங்கள் வீதம் கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடவுள்ளன.
இதன் மூலம் வாரத்திற்கு மொத்தம் 35 விமானங்கள் இலங்கைக்குப் பயணிக்கவுள்ளதாகக் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கட்டார் எயார்வேஸ் நிறுவனத்தின் இந்த மேலதிக விமானச் சேவைகள், இலங்கைக்கும் உலகின் முக்கிய சர்வதேச சந்தைகளுக்கும் இடையிலான வான்வழிப் பயண இணைப்புகளை (Flight Connectivity) மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பிற்கான விமான சேவைகளை அதிகரித்த கட்டார் எயார்வேஸ் இலங்கையின் கொழும்பு நகருக்கான தமது விமான சேவைகளை கணிசமாக அதிகரிப்பதற்கு உலகப் புகழ்பெற்ற கட்டார் எயார்வேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.2026 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த விரிவுபடுத்தப்பட்ட விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.புதிய மாற்றத்தின்படி, நாளொன்றுக்கு 5 விமானங்கள் வீதம் கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடவுள்ளன.இதன் மூலம் வாரத்திற்கு மொத்தம் 35 விமானங்கள் இலங்கைக்குப் பயணிக்கவுள்ளதாகக் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கட்டார் எயார்வேஸ் நிறுவனத்தின் இந்த மேலதிக விமானச் சேவைகள், இலங்கைக்கும் உலகின் முக்கிய சர்வதேச சந்தைகளுக்கும் இடையிலான வான்வழிப் பயண இணைப்புகளை (Flight Connectivity) மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.