டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இன்று சாமிமலை மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கான பங்களிப்பினை அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் நிதி பங்களிப்பின் மூலமாக யுனெப்ஸ்-விருத்தி செயற் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக 'சிப்ஸ்' நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.
மேற்படி நிதி பங்களிப்பினால் சுமார் 300 மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், இவ்வாரத்தில் பொகவந்தலாவ, கொட்டகலை, சாமிமலை மற்றும் மஸ்கெலியா பகுதி மாணவர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணேசலிங்கம் தெரிவித்தார்.
குறித்த செயற்பாடுகளினால் பொகவந்தலாவ கேக்கசோல்ட் 319 கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொட்டகலை சாய்ஸ் த.வி, மஸ்கெலியா புளூம்பில்ட் தேசிய கல்லூரி மற்றும் சாமி மலை பாரதி த.வித்தியாலய மாணவர்கள் நன்மையடைந்தனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள், ஓய்வுபெற்ற இஸ்ரேல் தூதுவர் பெ.செல்வராஜா மற்றும் சிப்ஸ் நிறுவன உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மலையக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் இன்று சாமிமலை மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவத்தினால் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கான பங்களிப்பினை அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் நிதி பங்களிப்பின் மூலமாக யுனெப்ஸ்-விருத்தி செயற் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக 'சிப்ஸ்' நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார். மேற்படி நிதி பங்களிப்பினால் சுமார் 300 மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும், இவ்வாரத்தில் பொகவந்தலாவ, கொட்டகலை, சாமிமலை மற்றும் மஸ்கெலியா பகுதி மாணவர்களுக்கு சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணேசலிங்கம் தெரிவித்தார்.குறித்த செயற்பாடுகளினால் பொகவந்தலாவ கேக்கசோல்ட் 319 கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொட்டகலை சாய்ஸ் த.வி, மஸ்கெலியா புளூம்பில்ட் தேசிய கல்லூரி மற்றும் சாமி மலை பாரதி த.வித்தியாலய மாணவர்கள் நன்மையடைந்தனர்.குறிப்பிட்ட நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள், ஓய்வுபெற்ற இஸ்ரேல் தூதுவர் பெ.செல்வராஜா மற்றும் சிப்ஸ் நிறுவன உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.