• Sep 30 2026

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் முன்னேற்ற மீளாய்வு

dorin / Sep 30th 2026, 3:11 pm
image

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் "உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கட்டமைப்பு" தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இனங்கண்டு, அவற்றில் டிஜிட்டல் கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்கூடிய மற்றும் உள்ளடக்க முடியாத சேவைகள் எவை என வேறுபடுத்திக் கொள்ளுமாறும், பல்வேறு நிறுவனங்களின் தனித்தனிக் கட்டமைப்புகளுக்குப் பதிலாக முழுமையான அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒற்றைத் தேசியக் கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இந்தப் பணிகளின் போது பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புகளின் குறைகளைக் களைந்து, தேசிய கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.


பிரதேச செயலக டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய இந்தத் திட்டத்தை ஒரு தொகுதியாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வரி செலுத்துதல்கள், விளம்பரப் பலகைக் கட்டணங்கள், விளையாட்டரங்குகள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல், விற்பனை நிலைய வாடகைகள், நீர் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்கள்/உரிமங்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் குறித்து ஆராயப்பட்டது.

பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் 300 இற்கும் மேற்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டதுடன், கிராம உத்தியோகத்தர் பிரிவு முதல் பிரதேச மற்றும் மாவட்ட செயலக மட்டம் வரை சேவைகளை வலையமைக்கும் செயற்பாட்டின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டமயமாக்கல் செயற்பாடுகள், குறிப்பாக நெல் கொள்முதல் மற்றும் டித்வா அனர்த்த நிவாரணம் வழங்குதல் போன்ற செயற்பாடுகளின் வெற்றிகள் குறித்துக் கவனத்தில் கொள்ளப்பட்டது.

அரச அதிகாரிகள் நியமனம் பெற்ற நாள் முதல் ஓய்வுபெறும் காலம் வரை உள்ள முழுமையான செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் முன்னேற்ற மீளாய்வு மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் "உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கட்டமைப்பு" தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இனங்கண்டு, அவற்றில் டிஜிட்டல் கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்கூடிய மற்றும் உள்ளடக்க முடியாத சேவைகள் எவை என வேறுபடுத்திக் கொள்ளுமாறும், பல்வேறு நிறுவனங்களின் தனித்தனிக் கட்டமைப்புகளுக்குப் பதிலாக முழுமையான அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒற்றைத் தேசியக் கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.இந்தப் பணிகளின் போது பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புகளின் குறைகளைக் களைந்து, தேசிய கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.பிரதேச செயலக டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய இந்தத் திட்டத்தை ஒரு தொகுதியாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.வரி செலுத்துதல்கள், விளம்பரப் பலகைக் கட்டணங்கள், விளையாட்டரங்குகள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல், விற்பனை நிலைய வாடகைகள், நீர் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்கள்/உரிமங்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் குறித்து ஆராயப்பட்டது.பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் 300 இற்கும் மேற்பட்ட சேவைகள் அடையாளம் காணப்பட்டதுடன், கிராம உத்தியோகத்தர் பிரிவு முதல் பிரதேச மற்றும் மாவட்ட செயலக மட்டம் வரை சேவைகளை வலையமைக்கும் செயற்பாட்டின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டமயமாக்கல் செயற்பாடுகள், குறிப்பாக நெல் கொள்முதல் மற்றும் டித்வா அனர்த்த நிவாரணம் வழங்குதல் போன்ற செயற்பாடுகளின் வெற்றிகள் குறித்துக் கவனத்தில் கொள்ளப்பட்டது.அரச அதிகாரிகள் நியமனம் பெற்ற நாள் முதல் ஓய்வுபெறும் காலம் வரை உள்ள முழுமையான செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement