• May 30 2026

எமது காணிகளில் வழிபாட்டுக்கு தடை; வெசாக் நிகழ்வுக்கு அனுமதி! கறுப்பு கொடியுடன் மக்கள் எதிர்ப்பு

Chithra / May 29th 2026, 1:08 pm
image

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் , வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் காலை 9 மணியளவில் ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.


யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.


இந்நிலையில் தமது  காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.


கடந்த 36 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களில் வாழும் உரிமையை இழந்துள்ள போதிலும், வெசாக் மற்றும் ஏனைய நிகழ்விகளின் போது பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி தமது நிகழ்வுகளை நடாத்தும் இராணுவத்தினர், செபஸ்தியார் கோவில் மற்றும் காணிக்கை மாதா கோவில்களுக்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதன்போது மயிலிட்டியிலிருந்து பலாலி வரை போராட்டப் பேரணி இடம்பெற்றது. இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சமூக ஆர்வலர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


எமது காணிகளில் வழிபாட்டுக்கு தடை; வெசாக் நிகழ்வுக்கு அனுமதி கறுப்பு கொடியுடன் மக்கள் எதிர்ப்பு நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் , வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் காலை 9 மணியளவில் ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் தமது  காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் போராட்டத்தை முன்னடுத்தனர்.கடந்த 36 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களில் வாழும் உரிமையை இழந்துள்ள போதிலும், வெசாக் மற்றும் ஏனைய நிகழ்விகளின் போது பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி தமது நிகழ்வுகளை நடாத்தும் இராணுவத்தினர், செபஸ்தியார் கோவில் மற்றும் காணிக்கை மாதா கோவில்களுக்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதன்போது மயிலிட்டியிலிருந்து பலாலி வரை போராட்டப் பேரணி இடம்பெற்றது. இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சமூக ஆர்வலர்கள், மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement