• Aug 30 2026

பால்மா, பால், யோகட் விலை உயர்வு? சமூக வலைத்தள செய்தி பொய் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு

Aathira / Aug 30th 2026, 10:04 am
image

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“BREAKING NEWS” எனக் குறிப்பிடப்பட்டு, பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருவதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, தகவல்களை உறுதிப்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவதால், நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சமும் சந்தையில் குழப்பமும் ஏற்படக்கூடும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பால்மா, பால், யோகட் விலை உயர்வு சமூக வலைத்தள செய்தி பொய் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.“BREAKING NEWS” எனக் குறிப்பிடப்பட்டு, பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருவதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.எனினும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, தகவல்களை உறுதிப்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவதால், நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சமும் சந்தையில் குழப்பமும் ஏற்படக்கூடும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.மேலும், சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement