• Jun 28 2026

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம்! சுனாமி அபாயமா?

Chithra / Jun 28th 2026, 4:37 pm
image


ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 41 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.


எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஹச்சினோஹே நகரம், புடாய் கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதுடன், ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் இது 'நெகட்டிவ் 5' ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோ உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூன் 25 ஆம் திகதி இதே இவதே கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6-ஐத் தாண்டிய மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


இதனிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மலைப்பாங்கான பகுதிகளில் பாறைச் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில், ஜப்பானிய பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது சமூக ஊடகப் பதிவில், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


மேலும், ஜூன் 25ஆம் திகதி நிலநடுக்கத்திற்குப் பின்னர் பிரதமரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அவசரகால மேலாண்மைப் பிரிவு தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், பாதிப்பு தொடர்பான தகவல்களை விரைவாகச் சேகரித்து, பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களையும் தேவையான உதவிகளையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் சுனாமி அபாயமா ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று (28) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 41 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஹச்சினோஹே நகரம், புடாய் கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதுடன், ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் இது 'நெகட்டிவ் 5' ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோ உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 25 ஆம் திகதி இதே இவதே கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6-ஐத் தாண்டிய மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.இதனிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மலைப்பாங்கான பகுதிகளில் பாறைச் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், ஜப்பானிய பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது சமூக ஊடகப் பதிவில், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும், ஜூன் 25ஆம் திகதி நிலநடுக்கத்திற்குப் பின்னர் பிரதமரின் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அவசரகால மேலாண்மைப் பிரிவு தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், பாதிப்பு தொடர்பான தகவல்களை விரைவாகச் சேகரித்து, பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களையும் தேவையான உதவிகளையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement