• May 27 2026

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபை செயலாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு!

Ziya / May 27th 2026, 11:42 am
image

வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர் தனது நடவடிக்கைக்கு விபத்துக்குள்ளான வாகனத்தை தரவில்லை எனக் கூறி புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.


இன்று (26.05) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கட்டக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அதிகாலை 2.20 மணியவில் தவிசாளரின் வாகனத்துடன் மாடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது


குறித்த விபத்தையடுத்து சேதமடைந்த வாகனத்தை திருத்தம் செய்வதற்காக விபத்து இடம்பெற்று 3 தினங்களுக்குள் பிரதி பிரதம செயலாளர் அவர்களுக்கு சபை செயலாளரால் விபத்து நடந்த இடம், விபத்து விபரம்,  திருத்தம் செய்ய வேண்டிய மதிப்பீட்டு அறிக்கை, உறுதிப்படுத்திய பொலிசின் அறிக்கை, உறுதிப்படுத்திய காப்புறுதி நிறுவனத்தின் மதிப்பீட்டு பத்திரம், விபத்து தொடர்பில் சாரதியின் அறிக்கை, விபத்து நடைபெற்ற போது குறித்த வாகனத்தை பயன்படுத்திய தவிசாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


ஆனால், அன்றிலிருந்து இன்று (26.05) நண்பகல் 12.30 வரை சபை செயலாளர், வாகன விடய உத்தியோகத்தர் மற்றும் சிற்றூழியர்கள் சபை தவிசாளரிடம் அறிக்கை கோரிய போதும் குறித்த அறிக்கை அவரால் வழங்கப்படவில்லை. தனக்கு கீழ் பணிபுரியும் தங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது என மறுத்துள்ளார்.  


இதனால் வாகனம் திருத்தப்படாமல் உள்ளது. அத்துடன் விபத்துக்குள்ளான வாகனத்தை திருத்தம் செய்யாது தவிசாளரின் செயற்பாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு பிரதேச சபை செயலாளர் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தவிசாளர் புளியங்குளம் பொலிசில் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இது தொடபில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபை செயலாளருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர் தனது நடவடிக்கைக்கு விபத்துக்குள்ளான வாகனத்தை தரவில்லை எனக் கூறி புளியங்குளம் பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.இன்று (26.05) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கட்டக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அதிகாலை 2.20 மணியவில் தவிசாளரின் வாகனத்துடன் மாடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுகுறித்த விபத்தையடுத்து சேதமடைந்த வாகனத்தை திருத்தம் செய்வதற்காக விபத்து இடம்பெற்று 3 தினங்களுக்குள் பிரதி பிரதம செயலாளர் அவர்களுக்கு சபை செயலாளரால் விபத்து நடந்த இடம், விபத்து விபரம்,  திருத்தம் செய்ய வேண்டிய மதிப்பீட்டு அறிக்கை, உறுதிப்படுத்திய பொலிசின் அறிக்கை, உறுதிப்படுத்திய காப்புறுதி நிறுவனத்தின் மதிப்பீட்டு பத்திரம், விபத்து தொடர்பில் சாரதியின் அறிக்கை, விபத்து நடைபெற்ற போது குறித்த வாகனத்தை பயன்படுத்திய தவிசாளரின் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.ஆனால், அன்றிலிருந்து இன்று (26.05) நண்பகல் 12.30 வரை சபை செயலாளர், வாகன விடய உத்தியோகத்தர் மற்றும் சிற்றூழியர்கள் சபை தவிசாளரிடம் அறிக்கை கோரிய போதும் குறித்த அறிக்கை அவரால் வழங்கப்படவில்லை. தனக்கு கீழ் பணிபுரியும் தங்களுக்கு அறிக்கை வழங்க முடியாது என மறுத்துள்ளார்.  இதனால் வாகனம் திருத்தப்படாமல் உள்ளது. அத்துடன் விபத்துக்குள்ளான வாகனத்தை திருத்தம் செய்யாது தவிசாளரின் செயற்பாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு பிரதேச சபை செயலாளர் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தவிசாளர் புளியங்குளம் பொலிசில் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இது தொடபில் புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement