நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் போக்குவரத்து விதிமுறைகளைத் துச்சமாக மதித்துச் செயல்படும் இளைஞர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னரும், இளைஞர்கள் மத்தியில் மாற்றம் ஏற்படாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான காட்சி வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது
தலைக்கவசம் அணியாமல், அதிக வேகத்தில் பயணித்த இளைஞர்களின் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்ட சம்பவங்கள் பதிவாகின.
கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து பொலிசார், ஹெல்மெட் அணியாமல் பயணித்த சில இளைஞர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
பல முறை விழிப்புணர்வு வழங்கப்பட்டும், விபத்துகள் தொடர்ந்து இடம்பெறுவதும் அதிகாரிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்ந்து விபத்துக்கள் இடம்பெற்று, அவற்றைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில இளைஞர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது கவலைக்கிடமாக உள்ளது. இது அவர்களது உயிருக்கும், மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருவதுடன், விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சாரதி அனுமதி (Driving License) பெறாத உங்களுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பொறுப்பற்ற செயல்கள் எதிர்காலத்தில் பெரிய விபத்துகளுக்கும் சட்ட சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு என்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே உயிரிழப்புகளை குறைத்து, பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஹெல்மெட் அணியாமல் தப்பியோட முயன்ற இளைஞர்கள்-மடக்கி பிடித்த பொலிஸார் நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் போக்குவரத்து விதிமுறைகளைத் துச்சமாக மதித்துச் செயல்படும் இளைஞர்கள் மீது பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னரும், இளைஞர்கள் மத்தியில் மாற்றம் ஏற்படாதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான காட்சி வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுதலைக்கவசம் அணியாமல், அதிக வேகத்தில் பயணித்த இளைஞர்களின் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.இந்நிலையில், நேற்று மீண்டும் அதே பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்ட சம்பவங்கள் பதிவாகின. கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து பொலிசார், ஹெல்மெட் அணியாமல் பயணித்த சில இளைஞர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.பல முறை விழிப்புணர்வு வழங்கப்பட்டும், விபத்துகள் தொடர்ந்து இடம்பெறுவதும் அதிகாரிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து விபத்துக்கள் இடம்பெற்று, அவற்றைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில இளைஞர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது கவலைக்கிடமாக உள்ளது. இது அவர்களது உயிருக்கும், மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருவதுடன், விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும், சாரதி அனுமதி (Driving License) பெறாத உங்களுடைய பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பொறுப்பற்ற செயல்கள் எதிர்காலத்தில் பெரிய விபத்துகளுக்கும் சட்ட சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வீதி பாதுகாப்பு என்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே உயிரிழப்புகளை குறைத்து, பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்