புளோரிடா கடற்கரைக்கு அப்பால் அட்லாண்டிக் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த 11 பேரையும், அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டுள்ளது.
இந்த மீட்புப் பணிக்காக 5 மணிநேரத்திற்கும் அதிக நேரம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டரின் எரிபொருள் தீர இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அனைவரையும் பாதுகாப்பாக மீட்டமை அதிசயமாகக் கருதப்படுகிறது.
மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் எலிசபெத் பியோவடி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் உயிர் தப்பியிருப்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்” என குறிப்பிட்டுள்ளார்.
பஹாமாஸ் தீவுக்கூட்டத்திலிருந்து புறப்பட்ட இரண்டு என்ஜின்கள் கொண்ட ‘Turboprop’ ரக தனியார் விமானம், புளோரிடாவின் மெல்போர்ன் கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் கடலில் விழுந்த உடனே செயல்பட்ட அவசரகால சமிக்ஞை அமைப்பின் மூலம் கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் HC-130J விமானம் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.
விபத்துக்குப் பிறகு சுமார் ஐந்து மணிநேரம் வரை பயணிகள் உயிர் காக்கும் படகின் உதவியுடன் கடலில் மிதந்துகொண்டிருந்தனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போதிலும், மீட்புக் குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர்.
ஹெலிகொப்டர் மூலம் மீட்பதற்கு முன், உணவு, குடிநீர் மற்றும் கூடுதல் உயிர் காக்கும் கருவிகள் வான்வழியாக அனுப்பப்பட்டன.
பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக மெல்போர்ன் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
எனினும், விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
கடலில் விழுந்த விமானம் - 11 பேரை உயிருடன் மீட்ட அமெரிக்க படைகள் புளோரிடா கடற்கரைக்கு அப்பால் அட்லாண்டிக் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த 11 பேரையும், அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டுள்ளது.இந்த மீட்புப் பணிக்காக 5 மணிநேரத்திற்கும் அதிக நேரம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டரின் எரிபொருள் தீர இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அனைவரையும் பாதுகாப்பாக மீட்டமை அதிசயமாகக் கருதப்படுகிறது.மீட்புப் பணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் எலிசபெத் பியோவடி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் உயிர் தப்பியிருப்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்” என குறிப்பிட்டுள்ளார்.பஹாமாஸ் தீவுக்கூட்டத்திலிருந்து புறப்பட்ட இரண்டு என்ஜின்கள் கொண்ட ‘Turboprop’ ரக தனியார் விமானம், புளோரிடாவின் மெல்போர்ன் கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.விமானம் கடலில் விழுந்த உடனே செயல்பட்ட அவசரகால சமிக்ஞை அமைப்பின் மூலம் கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் HC-130J விமானம் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.விபத்துக்குப் பிறகு சுமார் ஐந்து மணிநேரம் வரை பயணிகள் உயிர் காக்கும் படகின் உதவியுடன் கடலில் மிதந்துகொண்டிருந்தனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போதிலும், மீட்புக் குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர்.ஹெலிகொப்டர் மூலம் மீட்பதற்கு முன், உணவு, குடிநீர் மற்றும் கூடுதல் உயிர் காக்கும் கருவிகள் வான்வழியாக அனுப்பப்பட்டன.பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக மெல்போர்ன் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. எனினும், விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.