ஓடுபாதையில் இருந்து புறப்படத் தயாரான விமானமொன்றில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானிகள் சாகசமாக செயற்பட்டு விமானத்தை நிறுத்தியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான A330 விமானமே இவ்வாறு இயந்திரக்கோளாறால் நிறுத்தப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் இருந்து டோகாவிற்கு குறித்த விமானம் புறப்பட தயாரானது.
ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட வேளையில் விமானத்தின் இரண்டாவது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இயந்திரப்பகுதியிலிருந்து திடீரென மின்கதிர்கள் தென்பட ஆரம்பித்தன. இதனை அவதானித்த விமானிகள் சாகசமாக செயற்பட்டு விமானத்தை இடைநிறுத்தினர்.
இதனால் பயணிகள், விமானிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணிகளை பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் முன்னெடுத்துள்ளது.
விமானம் புறப்பட்ட வேளையில் இயந்திரத்திலிருந்து மின்கதிர்கள் பாய்ச்சுவதைப் பார்க்கையில் விமானம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காணப்பட்டுள்ளது.
எனினும் நடக்கவிருந்த பெரிய விபத்து அதிர்ஸ்டவசமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஓடுபாதையில் புறப்பட தயாராகிய விமானம்; என்ஜினிலிருந்து சீறிய மின்கதிர் - சாகசமாக நிறுத்திய விமானிகள் ஓடுபாதையில் இருந்து புறப்படத் தயாரான விமானமொன்றில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானிகள் சாகசமாக செயற்பட்டு விமானத்தை நிறுத்தியுள்ளனர்.பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான A330 விமானமே இவ்வாறு இயந்திரக்கோளாறால் நிறுத்தப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் இருந்து டோகாவிற்கு குறித்த விமானம் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட வேளையில் விமானத்தின் இரண்டாவது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இயந்திரப்பகுதியிலிருந்து திடீரென மின்கதிர்கள் தென்பட ஆரம்பித்தன. இதனை அவதானித்த விமானிகள் சாகசமாக செயற்பட்டு விமானத்தை இடைநிறுத்தினர். இதனால் பயணிகள், விமானிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணிகளை பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் முன்னெடுத்துள்ளது. விமானம் புறப்பட்ட வேளையில் இயந்திரத்திலிருந்து மின்கதிர்கள் பாய்ச்சுவதைப் பார்க்கையில் விமானம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காணப்பட்டுள்ளது. எனினும் நடக்கவிருந்த பெரிய விபத்து அதிர்ஸ்டவசமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.