• Jul 16 2026

பட்ட நூல் சிக்கியதால் மீண்டும் தரையிறங்கிய விமானம்! இரத்மலானயில் சம்பவம்

Chithra / Jul 15th 2026, 4:44 pm
image


 

இரத்மலான விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டத்தின் நூல் சிக்கியதால், அந்த விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இன்று (15) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகளில், விமானத்தின் இடது சக்கரம், இடது இயந்திரப் பகுதி உள்ளிட்ட பல முக்கிய பாகங்களில் பட்ட நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


பட்டத்தின் நூல்கள் அல்லது அதன் பாகங்கள் விமானத்தின் இயந்திரத்திற்குள் அல்லது இயக்க முறைமைகளுக்குள் நுழைந்தால், விமானத்திற்கு பாரிய சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.


தற்போது பட்டம் விடும் பருவம் நிலவி வருவதால், விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இது விமானப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகொட, சைனாபே, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மட்டால ஆகிய விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என விமானப்படை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

பட்ட நூல் சிக்கியதால் மீண்டும் தரையிறங்கிய விமானம் இரத்மலானயில் சம்பவம்  இரத்மலான விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டத்தின் நூல் சிக்கியதால், அந்த விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இன்று (15) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனைகளில், விமானத்தின் இடது சக்கரம், இடது இயந்திரப் பகுதி உள்ளிட்ட பல முக்கிய பாகங்களில் பட்ட நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.பட்டத்தின் நூல்கள் அல்லது அதன் பாகங்கள் விமானத்தின் இயந்திரத்திற்குள் அல்லது இயக்க முறைமைகளுக்குள் நுழைந்தால், விமானத்திற்கு பாரிய சேதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.தற்போது பட்டம் விடும் பருவம் நிலவி வருவதால், விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இது விமானப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகொட, சைனாபே, அனுராதபுரம், பலாலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மட்டால ஆகிய விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என விமானப்படை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement