• May 18 2026

நுவரெலியா ஏரிக்குள் வீழ்ந்த விமானம்; கிரேன் மூலம் மீட்கும் பரபரப்பு காட்சிகள்!

shanu / Jan 10th 2026, 6:05 pm
image

நுவரெலியாவில் ஏரிக்குள் விழுந்து விபத்திற்குள்ளான விமானத்தை கிரேன் மூலம் மீட்கும் பரபரப்புக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 


நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த  விபத்து  கடந்த  (07) புதன்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. 


விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 


விமானம் விழுந்து விபத்திற்குள்ளாகும் காட்சிகளும் ஏரிக்குள் விமானம் தத்தளித்த காட்சிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்போது விமானத்தை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 


ஏரியில் விழுந்த விமானத்தை மீட்க பொலிஸாரும் கடற்படையினரும் மீனவர்களின் படகுகள் மூலம் முயற்சி செய்தனர். எனினும் அந்த முயற்சி தோல்வியில் அடைந்தது. 


இந்நிலையில் இன்று கிரேன் வாகனம் மூலம் ஏரியிலிருந்த விமானத்தை நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் மீட்டுள்ளனர். 


பொலிஸார், கடற்படையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் இணைந்து குறித்த விமானத்தை ஏரியிலிருந்து மீட்டனர். 


விமானம் கிரேன் மூலம் மீட்கப்பட்ட பரபரப்புக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா ஏரிக்குள் வீழ்ந்த விமானம்; கிரேன் மூலம் மீட்கும் பரபரப்பு காட்சிகள் நுவரெலியாவில் ஏரிக்குள் விழுந்து விபத்திற்குள்ளான விமானத்தை கிரேன் மூலம் மீட்கும் பரபரப்புக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த  விபத்து  கடந்த  (07) புதன்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். விமானம் விழுந்து விபத்திற்குள்ளாகும் காட்சிகளும் ஏரிக்குள் விமானம் தத்தளித்த காட்சிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்போது விமானத்தை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏரியில் விழுந்த விமானத்தை மீட்க பொலிஸாரும் கடற்படையினரும் மீனவர்களின் படகுகள் மூலம் முயற்சி செய்தனர். எனினும் அந்த முயற்சி தோல்வியில் அடைந்தது. இந்நிலையில் இன்று கிரேன் வாகனம் மூலம் ஏரியிலிருந்த விமானத்தை நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் மீட்டுள்ளனர். பொலிஸார், கடற்படையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் இணைந்து குறித்த விமானத்தை ஏரியிலிருந்து மீட்டனர். விமானம் கிரேன் மூலம் மீட்கப்பட்ட பரபரப்புக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement