உத்தியோகபூர்வ காவல் நிலைய குடியிருப்புகளிலிருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்டிருப்பது குறித்து பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒன்றுகூடி தமது பிரச்சனையை வெளிப்படுத்தும் கடிதத்தை கையளித்துள்ளனர்.
குறித்த தரப்பினரின் வழக்கறிஞர் இது தொடர்பாக தெரிவித்தாவது,
தற்போது காவல் நிலையங்களில் வசிக்கும் குடும்பங்கள் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டும் எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முடிவால் 375 முதல் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியான வெளியேற முடியாத காரணத்தினால் இந்த குடும்பங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன.
மேலும் நாட்டில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் குறைந்த வருமானத்தால், குறுகிய காலத்தில் மாற்று வீடுகளைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தெரிவித்தார்.
கொழும்பில் சராசரி வாடகை செலவுகள் ரூ. 35,000 முதல் ரூ. 45,000 வரை இருப்பதாகவும்,பல அதிகாரிகளின் மனைவிகள் பகுதிநேர வேலை செல்வதனால் வீட்டில் தமது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக குடும்ப உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
உத்தியோகபூர்வ குடியிருப்புகளிலிருந்து வெளியேற்ற திட்டம் - பொலிஸ் குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு உத்தியோகபூர்வ காவல் நிலைய குடியிருப்புகளிலிருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்டிருப்பது குறித்து பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒன்றுகூடி தமது பிரச்சனையை வெளிப்படுத்தும் கடிதத்தை கையளித்துள்ளனர்.குறித்த தரப்பினரின் வழக்கறிஞர் இது தொடர்பாக தெரிவித்தாவது, தற்போது காவல் நிலையங்களில் வசிக்கும் குடும்பங்கள் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டும் எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்த முடிவால் 375 முதல் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.உடனடியான வெளியேற முடியாத காரணத்தினால் இந்த குடும்பங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன.மேலும் நாட்டில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் குறைந்த வருமானத்தால், குறுகிய காலத்தில் மாற்று வீடுகளைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தெரிவித்தார்.கொழும்பில் சராசரி வாடகை செலவுகள் ரூ. 35,000 முதல் ரூ. 45,000 வரை இருப்பதாகவும்,பல அதிகாரிகளின் மனைவிகள் பகுதிநேர வேலை செல்வதனால் வீட்டில் தமது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக குடும்ப உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.