• Sep 19 2026

கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி – கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

Chithra / Sep 18th 2026, 12:48 pm
image


கொழும்பு துறைமுகத்திற்கு வணிகக் கப்பலொன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முயன்ற கப்பல் வழிகாட்டி (Pilot) ஒருவர் திடீர் விபத்தில் கடலில் விழுந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கப்பல் வழிகாட்டி ஒருவர் கடலில் விழுந்துள்ளதாக கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த P 163 கரையோர ரோந்துப் படகை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.


அங்கு கடலில் விழுந்த கப்பல் வழிகாட்டியை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு முனையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் ஆபத்தில் சிக்கக்கூடிய கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி – கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு கொழும்பு துறைமுகத்திற்கு வணிகக் கப்பலொன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முயன்ற கப்பல் வழிகாட்டி (Pilot) ஒருவர் திடீர் விபத்தில் கடலில் விழுந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் வழிகாட்டி ஒருவர் கடலில் விழுந்துள்ளதாக கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த P 163 கரையோர ரோந்துப் படகை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.அங்கு கடலில் விழுந்த கப்பல் வழிகாட்டியை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு முனையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் ஆபத்தில் சிக்கக்கூடிய கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement