மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) சனிக்கிழமை அதிகாலை பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பாதயாத்திரையில், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வருடாந்தம் இடம்பெறும் இப்பாதயாத்திரை, இம்முறை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது. பாதயாத்திரையை முன்னிட்டு பேராலயத்தில் விசேட திருப்பலி நடைபெற்றதுடன், இதில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பலியைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் பாதயாத்திரை ஆரம்பமானது. வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாகச் சென்று, வலையிறவுப் பாலத்தை கடந்து வவுனதீவை சென்றடைந்த பக்தர்கள், அங்கிருந்து ஆயித்தியமலை திருத்தலத்தை நோக்கி பயணித்தனர்.
இதன்போது விசேட சொரூபமும் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரை இடம்பெறும் முக்கியமான திருத்தலமாக ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் கருதப்படுகிறது.
கடந்த 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா, நாளை (06) ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.
ஆயித்தியமலை அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி நாளை (06) காலை நடைபெறவுள்ளது. காலை 5.00 மணிக்கு சிங்கள மொழியில் முதல் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு வரவேற்புடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயித்தியமலை அன்னையின் திருத்தலம் நோக்கி ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதயாத்திரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) சனிக்கிழமை அதிகாலை பக்தி உணர்வுடன் நடைபெற்றது.மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பாதயாத்திரையில், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.வருடாந்தம் இடம்பெறும் இப்பாதயாத்திரை, இம்முறை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது. பாதயாத்திரையை முன்னிட்டு பேராலயத்தில் விசேட திருப்பலி நடைபெற்றதுடன், இதில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.திருப்பலியைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் பாதயாத்திரை ஆரம்பமானது. வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாகச் சென்று, வலையிறவுப் பாலத்தை கடந்து வவுனதீவை சென்றடைந்த பக்தர்கள், அங்கிருந்து ஆயித்தியமலை திருத்தலத்தை நோக்கி பயணித்தனர்.இதன்போது விசேட சொரூபமும் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரை இடம்பெறும் முக்கியமான திருத்தலமாக ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் கருதப்படுகிறது.கடந்த 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா, நாளை (06) ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.ஆயித்தியமலை அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி நாளை (06) காலை நடைபெறவுள்ளது. காலை 5.00 மணிக்கு சிங்கள மொழியில் முதல் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு வரவேற்புடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.