• May 05 2026

வீடு புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர் கைது

Chithra / Feb 23rd 2026, 9:24 am
image


மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


இவர் மீகொடை, புவக்வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


சந்தேகநபரிடமிருந்து 4 தங்க மாலைகள், 3 தங்க மோதிரங்கள், ஒரு ஐம்பொன் பஞ்சாயுதம், ஒரு பதக்கம் மற்றும் 18,770 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. 


அத்துடன் தங்க ஆபரணங்களை அடகு வைத்ததற்கான 3 பற்றுச்சீட்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 


இச்சம்பவம் குறித்து மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீடு புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர் கைது மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மீகொடை, புவக்வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 4 தங்க மாலைகள், 3 தங்க மோதிரங்கள், ஒரு ஐம்பொன் பஞ்சாயுதம், ஒரு பதக்கம் மற்றும் 18,770 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்க ஆபரணங்களை அடகு வைத்ததற்கான 3 பற்றுச்சீட்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement