சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதற்கான உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்பட்டன.
“ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரது தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும், மரண தண்டனை தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், அவரை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி, அனோஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக நாடளாவிய ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து மனிதாபிமான முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.
அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.
“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் - கையெழுத்து சேகரிப்பு சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதற்கான உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்பட்டன.“ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரது தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இருப்பினும், மரண தண்டனை தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், அவரை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட்டு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி, அனோஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக நாடளாவிய ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து மனிதாபிமான முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.