• Apr 29 2026

'அமைதிக்கான நடைப்பயணம்' நிறைவு: மரக்கன்றை வழங்கினார் ஜனாதிபதி

Chithra / Apr 28th 2026, 7:40 pm
image

'அமைதிக்கான நடைப்பயணம்'  அல்லது 'ஏகி பஸ்ஸிகோ' (Ehi Passiko) அமைதிப் பேரணியின் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பேரணி கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி,   தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 7 நாட்கள் பயணித்து   கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று வந்தடைந்தது.

அரச விழாவாக நடைபெற்ற நிறைவு விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, புனித ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட போதி மரக்கன்றை, வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகார தேரர் தலைமையிலான அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பிக்குகளின் குழுவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த புனித மரக்கன்று மற்றும் புத்த பெருமானின் புனித எச்சங்கள் (Relics) அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அமைதிச் செய்தியைப் பரப்புவதற்காக நடப்படவுள்ளது.

'அமைதிக்கான நடைப்பயணம்' நிறைவு: மரக்கன்றை வழங்கினார் ஜனாதிபதி 'அமைதிக்கான நடைப்பயணம்'  அல்லது 'ஏகி பஸ்ஸிகோ' (Ehi Passiko) அமைதிப் பேரணியின் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.இப்பேரணி கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி,   தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 7 நாட்கள் பயணித்து   கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று வந்தடைந்தது.அரச விழாவாக நடைபெற்ற நிறைவு விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, புனித ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட போதி மரக்கன்றை, வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகார தேரர் தலைமையிலான அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பிக்குகளின் குழுவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.இந்த புனித மரக்கன்று மற்றும் புத்த பெருமானின் புனித எச்சங்கள் (Relics) அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அமைதிச் செய்தியைப் பரப்புவதற்காக நடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement