மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிராந்திய அமைதி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் இன்று சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உடன் ஷெரீப் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதில் பாகிஸ்தான்–சவூதி இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
பிரதமருடன், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும், இராணுவத் தலைமைத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவும் பயணத்தில் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைச் சூழல் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி, “மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி குறித்து பல நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஹோர்முஸ் நீரிணை விவகாரத்திற்கு விரிவான மற்றும் நீடித்த தீர்வைக் காண்பதற்கான எங்களது தூதரக முயற்சிகளும் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது
சவூதிக்கு விரைந்த பாகிஸ்தான் பிரதமர் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிராந்திய அமைதி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் இன்று சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இந்தப் பயணத்தின் போது, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உடன் ஷெரீப் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.இதில் பாகிஸ்தான்–சவூதி இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.பிரதமருடன், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும், இராணுவத் தலைமைத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவும் பயணத்தில் பங்கேற்கின்றனர்.இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைச் சூழல் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபி, “மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி குறித்து பல நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஹோர்முஸ் நீரிணை விவகாரத்திற்கு விரிவான மற்றும் நீடித்த தீர்வைக் காண்பதற்கான எங்களது தூதரக முயற்சிகளும் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது