• Apr 22 2026

53084 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை - 1632 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கை!

shanu / Apr 6th 2026, 9:47 pm
image

வடமாகாணத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக செய்கையாக  53084ஏக்கர்  நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 1632ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில  பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.


தற்போதைய வடமாகாணத்தின் குளங்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் வடமாகாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 53 குளங்களை பராமரித்து வருகின்றோம் அதில் 53குளங்களில் 2026ம் ஆண்டு சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


53084ஏக்கர் நெற்ச்செய்கையும் 1632ஏக்கரில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக கடந்த வருடம் 74வீதமாக காணப்பட்ட பயிர்ச்செய்கையானது 81.5வீதமாக அதிகரித்துள்ளது. 


12குளங்களில் 100வீத செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தின் கீழ் இம்முறை 21000ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் செய்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.


53084 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை - 1632 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில பயிர்ச்செய்கை வடமாகாணத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக செய்கையாக  53084ஏக்கர்  நிலப்பரப்பில் நெற்ச்செய்கையும் 1632ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டு நில  பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.தற்போதைய வடமாகாணத்தின் குளங்களின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் வடமாகாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 53 குளங்களை பராமரித்து வருகின்றோம் அதில் 53குளங்களில் 2026ம் ஆண்டு சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 53084ஏக்கர் நெற்ச்செய்கையும் 1632ஏக்கரில் மேட்டு நில பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக கடந்த வருடம் 74வீதமாக காணப்பட்ட பயிர்ச்செய்கையானது 81.5வீதமாக அதிகரித்துள்ளது. 12குளங்களில் 100வீத செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தின் கீழ் இம்முறை 21000ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் செய்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement