• Sep 09 2026

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும்! சஜித்

Aathira / Sep 8th 2026, 7:45 am
image

நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றது. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில் பிரதாபித்தாலும், இன்று அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை குறையும் நிலையிலும், தொடர்ந்தும் எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு அதனை அதிகரித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று அரசும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களுக்கு அடிமையாகியுள்ளது.

அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். 

எனினும், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே தெரிவித்த நிலையில், 120 ரூபாவை  நிலையான விலையாக அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வைப் பெறாமல் இருப்பதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற வேண்டும்.

கல்வித்துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுவதுடன், அவற்றுள் பாரிய குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், சுமார் 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும் உள்ளன. சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் பொய் வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவை நாம் பெற்றுக்கொடுப்போம். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி ஆசிரியர்களை நடுவீதியில் விடமாட்டோம்.

இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளில் தெளிவான இடைவெளிகள் உள்ளன. 

அரசுகள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வியைப் பாதுகாக்கும் ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக் கல்வியிலிருந்தே கல்வி நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட முறையில் இருந்து விடுபட்டு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.

இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரணங்கள் இல்லை. அவற்றை வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. 

மாணவர்களில் 40 வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் வசதி இல்லை. ஆங்கில மொழியிலான கல்வியை ஊக்குவிப்பதுடன், பிற்போக்கான காலாவதியான கருத்துக்களிலிருந்து நாம் வெளியேற வேண்டும். 

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை மேம்படுத்தி, அத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கான வசதிகளைத் தொடர்ந்து பெற்றுக்கொடுப்போம். இலவசக் கல்வியை வலுப்படுத்தி, எமது பிள்ளைகள் உலகை வெல்லக்கூடிய முறையான கல்வியை உருவாக்குவோம்  என்றார். 

ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும் சஜித் நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றது. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில் பிரதாபித்தாலும், இன்று அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை குறையும் நிலையிலும், தொடர்ந்தும் எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு அதனை அதிகரித்துள்ளனர்.புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று அரசும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களுக்கு அடிமையாகியுள்ளது.அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். எனினும், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே தெரிவித்த நிலையில், 120 ரூபாவை  நிலையான விலையாக அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வைப் பெறாமல் இருப்பதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற வேண்டும்.கல்வித்துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுவதுடன், அவற்றுள் பாரிய குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், சுமார் 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும் உள்ளன. சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் பொய் வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவை நாம் பெற்றுக்கொடுப்போம். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி ஆசிரியர்களை நடுவீதியில் விடமாட்டோம்.இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளில் தெளிவான இடைவெளிகள் உள்ளன. அரசுகள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வியைப் பாதுகாக்கும் ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக் கல்வியிலிருந்தே கல்வி நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட முறையில் இருந்து விடுபட்டு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரணங்கள் இல்லை. அவற்றை வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களில் 40 வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் வசதி இல்லை. ஆங்கில மொழியிலான கல்வியை ஊக்குவிப்பதுடன், பிற்போக்கான காலாவதியான கருத்துக்களிலிருந்து நாம் வெளியேற வேண்டும். பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை மேம்படுத்தி, அத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கான வசதிகளைத் தொடர்ந்து பெற்றுக்கொடுப்போம். இலவசக் கல்வியை வலுப்படுத்தி, எமது பிள்ளைகள் உலகை வெல்லக்கூடிய முறையான கல்வியை உருவாக்குவோம்  என்றார். 

Advertisement

Advertisement

Advertisement