• Apr 23 2026

3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

Chithra / Apr 23rd 2026, 8:52 pm
image

கேகாலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தை” முன்னிட்டு, 

நாளை முதல் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும். கடுகண்ணாவ முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் ஆகிய வர்த்தக நிலையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

சுற்றுச்சூழல் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைதி நடைபயணம் மற்றும் ஆன்மீக யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் ஒலிப்பான்களை (Horns) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் தம்மிக படபெந்தி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆன்மீக நிகழ்வின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் காவல்துறையினரின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. அமைதி நடைப்பயணம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு கேகாலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தை” முன்னிட்டு, நாளை முதல் 3 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாளை ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு இந்தத் தடை அமுலில் இருக்கும். கடுகண்ணாவ முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் ஆகிய வர்த்தக நிலையங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அமைதி நடைபயணம் மற்றும் ஆன்மீக யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் ஒலிப்பான்களை (Horns) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் தம்மிக படபெந்தி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த ஆன்மீக நிகழ்வின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் காவல்துறையினரின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. அமைதி நடைப்பயணம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement