• Sep 20 2026

22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்

Aathira / Sep 19th 2026, 8:51 am
image

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எனக் கூறி, எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டை ஒரு கட்சி முறைமை நோக்கி நகர்த்தக்கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்ற சந்திப்புக்கு அருகில் ஒன்றுகூடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலின்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 24ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் மற்றும் பாராளுமன்ற விவாதம் காரணமாக அரசியல் களத்தில் கவனம் திரும்பியுள்ளது.

22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.சுதந்திர ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எனக் கூறி, எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டை ஒரு கட்சி முறைமை நோக்கி நகர்த்தக்கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்ற சந்திப்புக்கு அருகில் ஒன்றுகூடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலின்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், 24ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் மற்றும் பாராளுமன்ற விவாதம் காரணமாக அரசியல் களத்தில் கவனம் திரும்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement