• May 21 2026

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு; விபத்தா? உயிர்மாய்ப்பா? பொலிஸார் விசாரணை!

shanu / Nov 25th 2025, 4:39 pm
image

நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


குறித்த சம்பவம் இன்று (25) காலை 9 மணியளவில் நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.


கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரே இவ்வாறு  மோதி உயிரிழந்துள்ளார். 


இதனையடுத்து சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு ரயில் பதுளை நோக்கி பயணித்துள்ளது. 


குறித்த நபரின் உயிரிழப்பு விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு; விபத்தா உயிர்மாய்ப்பா பொலிஸார் விசாரணை நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (25) காலை 9 மணியளவில் நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரே இவ்வாறு  மோதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு ரயில் பதுளை நோக்கி பயணித்துள்ளது. குறித்த நபரின் உயிரிழப்பு விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement