• May 17 2026

நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

Ziya / Jan 10th 2026, 5:25 pm
image

நீர்கொழும்பு, பெரியமுல்ல-எத்துகல ரயில் கடவைக்கு அருகில் நேற்று அதிகாலையில் உயர் ரக சொகுசு ஜீப்பில் ஏராளமான போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்தின் போது வாகனம் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்திய நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், ஆரம்பகட்ட சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் கஞ்சா, ஒரு கிராம் கோகைன் மற்றும் 100 போதை மாத்திரைகளை மீட்டனர்.

மேலும் விசாரணைகளின் விளைவாக, சந்தேக நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை  பொலிஸார் சோதனை செய்தனர், இதன் போது 29.240 கிராம் குஷ் மற்றும் 2.230 கிராம் அடையாளம் தெரியாத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபருக்குச் சொந்தமான மூலிகை மருந்து விற்பனை நிலையத்தையும் பொலிஸார் சோதனை செய்து, மேலும் 1,000 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது நீர்கொழும்பு, பெரியமுல்ல-எத்துகல ரயில் கடவைக்கு அருகில் நேற்று அதிகாலையில் உயர் ரக சொகுசு ஜீப்பில் ஏராளமான போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின் போது வாகனம் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் வாகனத்தை நிறுத்திய நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், ஆரம்பகட்ட சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் கஞ்சா, ஒரு கிராம் கோகைன் மற்றும் 100 போதை மாத்திரைகளை மீட்டனர்.மேலும் விசாரணைகளின் விளைவாக, சந்தேக நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை  பொலிஸார் சோதனை செய்தனர், இதன் போது 29.240 கிராம் குஷ் மற்றும் 2.230 கிராம் அடையாளம் தெரியாத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.சந்தேக நபருக்குச் சொந்தமான மூலிகை மருந்து விற்பனை நிலையத்தையும் பொலிஸார் சோதனை செய்து, மேலும் 1,000 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.சந்தேக நபர் நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement