கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆகும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 43,423 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 35 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,474 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,710 பேரும், சீனாவிலிருந்து 8,224 பேரும் மற்றும் அமெரிக்காவிலிருந்து 3,806 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மே மாதத்தில் 145,745 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,146,573 வரை அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கையினருள் 293,683 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 108,567 பேரும், ரஷ்யாவிலிருந்து 77,349 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 76,171 பேரும் அடங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
ஜூனில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சி கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆகும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 43,423 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 35 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,474 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,710 பேரும், சீனாவிலிருந்து 8,224 பேரும் மற்றும் அமெரிக்காவிலிருந்து 3,806 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. மே மாதத்தில் 145,745 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,146,573 வரை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையினருள் 293,683 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 108,567 பேரும், ரஷ்யாவிலிருந்து 77,349 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 76,171 பேரும் அடங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.