பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் “நோனா அம்மா” என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்மா ரஞ்சனி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், செட்டிகுளத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகிப்பதற்காக வந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத்கொட மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்த இவர், நீண்டகாலமாக போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் காரணமாக “கொம்பனித்தெரு குடுநோனா” என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீண்டகாலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த பெண், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த வழக்கில் அவரிடமிருந்து 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விஷப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் கிரிபத்கொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் அவர் ஈட்டியதாகக் கூறப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் ஏனைய வளங்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, அண்மையில் இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சூட்டி உக்குங்” என்பவரின் அத்தை இவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், “கூம்பிக்கெலே சூட்டி” என அழைக்கப்படும் இவரது கணவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலம் பொலிஸாருக்கு தண்ணி காட்டிய 'நோனா அம்மா' கைது பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் “நோனா அம்மா” என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்மா ரஞ்சனி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், செட்டிகுளத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகிப்பதற்காக வந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிரிபத்கொட மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்த இவர், நீண்டகாலமாக போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் காரணமாக “கொம்பனித்தெரு குடுநோனா” என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.நீண்டகாலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த பெண், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அந்த வழக்கில் அவரிடமிருந்து 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அரச பகுப்பாய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது விஷப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் கிரிபத்கொட பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும், போதைப்பொருள் விற்பனை மூலம் அவர் ஈட்டியதாகக் கூறப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் ஏனைய வளங்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, அண்மையில் இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “சூட்டி உக்குங்” என்பவரின் அத்தை இவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், “கூம்பிக்கெலே சூட்டி” என அழைக்கப்படும் இவரது கணவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.