• Sep 13 2026

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது; மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது! பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்

Aathira / Sep 12th 2026, 7:41 am
image

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது.

மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.

மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும்.

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது.

இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர்." - என்றார்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது; மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது பிமல் ரத்நாயக்க திட்டவட்டம் தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது.மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும்.தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது.இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர்." - என்றார்

Advertisement

Advertisement

Advertisement