நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்கள் எவரும் அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் தீர்மானத்துக்குத் தங்களது சங்கம் ஆரம்பத்தில் இருந்தே கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கம் மக்களின் இறையாட்சியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதால், இது குறித்துத் தீர்மானம் எடுக்கும் முழு உரிமை மக்களுக்கே உண்டு.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் இந்தத் தீர்மானத்தை அரசு உடனடியாக மக்கள் வாக்கெடுப்புக்கு விட வேண்டும்.
அரச உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல தரப்பினரும் இந்தத் திருத்தத்தின் பாரதூரத்தன்மையைச் சுட்டிக்காட்டித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசின் நிலைப்பாடு ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதால் இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்." - என்றார்.
22ஆவது திருத்தத்தை எவரும் ஏற்கமாட்டர் ரஜீவ் அமரசூரிய தெரிவிப்பு நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்கள் எவரும் அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் தீர்மானத்துக்குத் தங்களது சங்கம் ஆரம்பத்தில் இருந்தே கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்,"அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் உள்ளடக்கம் மக்களின் இறையாட்சியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதால், இது குறித்துத் தீர்மானம் எடுக்கும் முழு உரிமை மக்களுக்கே உண்டு.நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் இந்தத் தீர்மானத்தை அரசு உடனடியாக மக்கள் வாக்கெடுப்புக்கு விட வேண்டும்.அரச உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல தரப்பினரும் இந்தத் திருத்தத்தின் பாரதூரத்தன்மையைச் சுட்டிக்காட்டித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசின் நிலைப்பாடு ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதால் இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்." - என்றார்.