• Sep 25 2026

வட்டி வீதங்களில் மாற்றமில்லை? மத்திய வங்கி முடிவு குறித்து புதிய எதிர்வுகூறல்

Chithra / Sep 25th 2026, 12:48 pm
image



இலங்கை மத்திய வங்கி தனது அடுத்தகட்ட நாணயக் கொள்கைத் தீர்மானத்தை எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.


இதன்போது, மத்திய வங்கியின் வட்டி வீதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.


அதன்படி, மத்திய வங்கியின் ஒருநாள் கொள்கை வட்டி வீதம் தற்போதுள்ள 8.75 சதவீதத்திலேயே தொடர்வதற்கு 60 சதவீத வாய்ப்புள்ளதாகவும், அதேவேளை வட்டி வீதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிப்பதற்கு 40 சதவீத வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட 100 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட வட்டி வீத அதிகரிப்பின் தாக்கம் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஒதுக்கீட்டுத் தேவைகள் மூலம், வட்டி வீதங்களை அதிகரிக்காமல் வங்கித் துறையில் காணப்படும் அதிகப்படியான பணப்புழக்கத்தை உறிஞ்சிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விட பணவீக்கம் அதிகரித்துள்ளமை தீர்மானத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய காரணியாக காணப்படுகிறது.


ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறையும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.


இதனிடையே, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு அபாயங்களும் மத்திய வங்கியின் எதிர்வரும் நாணயக் கொள்கைத் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வட்டி வீதங்களில் மாற்றமில்லை மத்திய வங்கி முடிவு குறித்து புதிய எதிர்வுகூறல் இலங்கை மத்திய வங்கி தனது அடுத்தகட்ட நாணயக் கொள்கைத் தீர்மானத்தை எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.இதன்போது, மத்திய வங்கியின் வட்டி வீதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.அதன்படி, மத்திய வங்கியின் ஒருநாள் கொள்கை வட்டி வீதம் தற்போதுள்ள 8.75 சதவீதத்திலேயே தொடர்வதற்கு 60 சதவீத வாய்ப்புள்ளதாகவும், அதேவேளை வட்டி வீதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிப்பதற்கு 40 சதவீத வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட 100 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட வட்டி வீத அதிகரிப்பின் தாக்கம் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஒதுக்கீட்டுத் தேவைகள் மூலம், வட்டி வீதங்களை அதிகரிக்காமல் வங்கித் துறையில் காணப்படும் அதிகப்படியான பணப்புழக்கத்தை உறிஞ்சிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விட பணவீக்கம் அதிகரித்துள்ளமை தீர்மானத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கிய காரணியாக காணப்படுகிறது.ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறையும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.இதனிடையே, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு அபாயங்களும் மத்திய வங்கியின் எதிர்வரும் நாணயக் கொள்கைத் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement