• Sep 09 2026

செவிப்புலன் வலுவிழந்தோருக்காக பொலிஸாரின் புதிய WhatsApp சேவை

Chithra / Sep 8th 2026, 3:52 pm
image


செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக வீடியோ வழியில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸார் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளனர்.


160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நிரந்தர குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றி செவிப்புலன் வலுவிழந்தவர்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.


இதற்காக 011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தை கைப்பேசியில் சேமித்துக்கொள்ள வேண்டும்.


பின்னர், அந்த இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் Audio Call ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அழைப்பு தானாகத் துண்டிக்கப்பட்ட பின்னர், கைப்பேசிக்கு விசேட இணைப்பு ஒன்று அனுப்பப்படும்.


அந்த இணைப்பைத் திறந்து “Join Browser” என்பதைத் தெரிவுசெய்து, தொடர்ந்து “Join Meeting” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர், வீடியோ அழைப்பின் ஊடாக பொலிஸாருடன் தொடர்புகொண்டு முறைப்பாட்டைச் சமர்ப்பிக்க முடியும்.


செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினரின் பாதுகாப்பையும் வசதியையும் கருத்திற்கொண்டு இந்த விசேட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செவிப்புலன் வலுவிழந்தோருக்காக பொலிஸாரின் புதிய WhatsApp சேவை செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக வீடியோ வழியில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸார் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளனர்.160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நிரந்தர குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றி செவிப்புலன் வலுவிழந்தவர்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.இதற்காக 011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தை கைப்பேசியில் சேமித்துக்கொள்ள வேண்டும்.பின்னர், அந்த இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் Audio Call ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அழைப்பு தானாகத் துண்டிக்கப்பட்ட பின்னர், கைப்பேசிக்கு விசேட இணைப்பு ஒன்று அனுப்பப்படும்.அந்த இணைப்பைத் திறந்து “Join Browser” என்பதைத் தெரிவுசெய்து, தொடர்ந்து “Join Meeting” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர், வீடியோ அழைப்பின் ஊடாக பொலிஸாருடன் தொடர்புகொண்டு முறைப்பாட்டைச் சமர்ப்பிக்க முடியும்.செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினரின் பாதுகாப்பையும் வசதியையும் கருத்திற்கொண்டு இந்த விசேட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement