• Sep 28 2026

பொலிஸாக்கு வருகிறது புதிய சீருடை– 10,000 புதிய அதிகாரிகள்! 2027இல் அதிரடி மாற்றங்கள்

Chithra / Sep 28th 2026, 12:36 pm
image


இலங்கை பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொலிஸ் சீருடைக்கு புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது  தயாரிக்கப்பட்டு வருகின்றது.  


இதனைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


அத்துடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


85ஆவது பொலிஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாமதமடைந்துள்ள அனைத்து பதவி உயர்வுகளும், சிரேஷ்டத்துவம், செயல்திறன், திறனறித் தேர்வுகள் மற்றும் தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், பதவி நிலையை அடிப்படையாகக் கொண்டு எந்தவித பாகுபாடுமின்றி, கீழ்நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் புதிய நடைமுறையொன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.


பொலிஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் சேவையையும் அங்கீகரிக்கும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதற்கு மேலதிகமாக, பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.


பொலிஸாக்கு வருகிறது புதிய சீருடை– 10,000 புதிய அதிகாரிகள் 2027இல் அதிரடி மாற்றங்கள் இலங்கை பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொலிஸ் சீருடைக்கு புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது  தயாரிக்கப்பட்டு வருகின்றது.  இதனைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.அத்துடன், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.85ஆவது பொலிஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாமதமடைந்துள்ள அனைத்து பதவி உயர்வுகளும், சிரேஷ்டத்துவம், செயல்திறன், திறனறித் தேர்வுகள் மற்றும் தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், பதவி நிலையை அடிப்படையாகக் கொண்டு எந்தவித பாகுபாடுமின்றி, கீழ்நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் புதிய நடைமுறையொன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.பொலிஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பையும் சேவையையும் அங்கீகரிக்கும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கு மேலதிகமாக, பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement